உலகளாவிய முதலீடுகளில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவானாக அறியப்படுபவர் Warren Buffett. சிறுவயதிலிருந்தே முதலீடுகளின் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். இவர் சில கொள்கைகளின் அடிப்படையில் தான் முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார்.
பண விஷயத்தில் நம்முடைய சில தவறுகளை சரி செய்து விட்டாலே தானாக உங்களின் செல்வம் பெருகும் எனக் கூறி பணம் சேர்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறார். அந்த 5 பண தவறுகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
முதலாகதக, நம்மால் கையாள முடியாத அளவுக்கு ஒருபோதும் கடன் வாங்க கூடாது. இவ்வாறு கடன் வாங்க தொடங்கினால் அது சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து பின்னாளில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என Warren எச்சரிக்கிறார்.
அடுத்ததாக வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப நம்முடைய செலவுகளை அதிகரிப்பது சரியான நிதி மேலாண்மை கிடையாது என்பது இவருடைய கருத்து. பணம் இருக்கிறது என்பதற்காக சில பொருட்கள் மீது செலவு செய்வது தேவையற்றது என அறிவுறுத்துகிறார்.
அடுத்து நம்முடைய வருமானத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியம் தான். இருந்தாலும் சரியான இடத்தில் முதலீடு செய்வது அதே அளவுக்கு முக்கியம் என கூறுகிறார்.
அடுத்ததாக எப்பொழுதுமே ஒரு அவசர கால நிதியை கையிருப்பில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது இவருடைய முக்கியமான அறிவுரையாக இருக்கிறது. அது திடீர் உடல்நலக் குறைவு, வேலையிழப்பு போன்றவற்றை சமாளிக்க உதவும்.
கடைசியாக எந்த முதலீடாக இருந்தாலும் பொறுமை தான் உங்களை பணக்காரராக்கும் சீக்ரெட் என்கிறார் Warren. ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது வளர்வதற்கு ஒரு காலத்தை கொடுக்க வேண்டும் என்பதும் அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதும் இவருடைய பிரதான ஆலோசனையாக இருக்கிறது.
இந்த Points ஐ Follow செய்தால் கையில் பண இருப்பு குறையாது என்பதே இவர் சொல்லும் அறிவுரை.