கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.