இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 534 சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 1,184 மின் விநியோக மின்மாற்றிகள் செயலிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் லடாக் அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கிக் கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லேயில் மழையால் சிக்கிக் கொண்டதாகவும், ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பின் போது இதேபோல் சிக்கிக் கொண்டதாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.