ராஜஸ்தான் மாநிலம் உதம்பூர் மாவட்டம் லிலாவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் கவர ராம் – ரேகா தம்பதி. ரேகா ஏற்கனவே 16 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்து, 17வது குழந்தையை பெற்றெடுத்தார்.
பிரசவத்தின்போது ரேகாவிற்கு 6 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதால், எஞ்சிய 11 பிள்ளைகளுடன் இருவரும் வாழ்ந்து வந்தனர். இதனிடையே தனக்கு 4வது குழந்தை என பொய்யாக கூறி, 17வது குழந்தை பிரசவத்துக்கு ரேகா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள், தொடர்ச்சியான கர்ப்பத்தால் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனக்கு பிறந்த குழந்தைகள் யாரையும் கவர ராம் கல்வி படிக்க வைக்கவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.