பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக மாநில வருவாய்த் துறையால் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவணம் ஆகும். பட்டா விவரங்கள் குறித்து கிராமக் கணக்குப் பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கும்.இவையெல்லாம் நமக்கு தெரிந்தவைதான்.ஆனால் நீங்கள் இருக்கும் நிலத்தை கண்டுபிடிக்க தமிழக அரசு ஒரு சிறப்பான ஒரு செயலியை கொண்டு வந்திருக்கிறது. அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக அரசு அவ்வப்போதும் ஏதேனும் திட்டங்களையும், அம்சங்களையும் கொண்டு வருகிறது. அந்த வகையில் நாம் இருந்த இடத்திலிருந்து அது யாரோட இடம் என்பதை தெரிந்துகொள்ள நம் கையில் இருக்கும் செல்போன் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
முதலில் உங்கள் செல்போனின் location-னை on செய்து கொள்ளவேண்டும் ,பிறகு chrome க்கு சென்று dongly tech என்று தேட வேண்டும், அதன் பிறகு முதலில் வரும் இணையதளத்தை கிளிக் செய்யவும்.
உள்ளே சென்றவுடன் Tamil Nadu Land Gi Viewer Online ( Nilam ) என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை டபுள் கிளிக் செய்யவும். அதன் உள்ளே சென்றவுடன் அந்த page-யின் கடைசிக்கு சென்றால் ஒரு Link Below என்று திரையில் வரும்.
அதன் கீழேயே You Can Get the Link in seconds. என்று 1 நிமிடம் கொடுக்கப்படும். அந்த நிமிடங்கள் முடிந்தவுடன் உங்களுக்கு map வடிவில் திரையில் தோன்றும்.
நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் ஊர், மாவட்டம், உரிமையாளர், பட்டா என அனைத்து தகவல்களும் திரையில் வந்துவிடும்..