ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழச்சாறை நொதித்து புளிக்கவைத்து தயாரிக்கப்படும் ஒரு வகை வினிகர். இதில் அசிட்டிக் அமிலம், தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்திருக்கும். ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையை குறைக்க உதவலாம். இது பசியை கட்டுப்படுத்துகிறது. உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் சீடர் வினிகர் உண்மையில் எடையை குறைக்க உதவுகிறது என்று சில ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் உள்ளன. ஆனால், இது ஒரு மருத்துவ மருந்து அல்ல, மேலும் நீரிழிவு மற்றும் இதர உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தினால் தொண்டை மற்றும் பற்கள் பாதிப்பு, வயிற்று பிரச்சனைகள் போன்ற ஆபத்தும் உள்ளது.
இது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை சேரும் அளவை கடுமையாக பாதிப்பதால் ரத்தத்திற்கு தேவையான சர்க்கரை கிடைக்காமல், நீரழிவு நோயாளி கடுமையான சோர்வால் பாதிக்கப்படுவார். இது அவருக்கு படபடப்பு உள்ளிட்ட சில இதய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மருத்துவரின் தக்க ஆலோசனை பெற்ற பிறகு ஆப்பிள் சீடர் வினிகரை குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.