Monday, January 26, 2026

உடற்பயிற்சியின் போது இந்த அறிகுறிகள் இருந்தா உஷாரா இருங்க..!

சமீப காலங்களாக உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுமா என சந்தேகப்படுவது இயல்பானது. எனவே, உடற்பயிற்சி செய்யும்போது கீழ்க்காணும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனித்துக் கொண்டால், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவது மிக அவசியம்.

தலைசுற்றல் அல்லது திடீர் தலைவலி

உடற்பயிற்சி செய்தபோது திடீரென தலைசுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்பட்டால், அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி ஆக இருக்கலாம். இதயம் போதுமான ஆக்ஸிஜன் வழங்காததால் மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தலைசுற்றல் ஏற்படும். இப்படியான எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தால் உடனேயே மருத்துவரை அணுகவும்.

சுவாசிப்பதில் சிரமம்

சுவாசிக்க மிகவும் கடினமாக இருந்தால், இதய செயல்பாட்டில் சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜன் போகவில்லை என்றால், அதன் விளைவாக மூச்சுத்திணறல் உண்டாகும். இதற்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்.

அதிக வியர்வை

உடற்பயிற்சி செய்யும் போது வியர்ப்பது சாதாரணம் தான். ஆனால் காரணமில்லாமல் திடீரென்று அதிகமாக வியர்வை வெளியேறி உடுத்திய உடை நனைந்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி ஆகும்.

கைகள், தோள்பட்டை மற்றும் தாடையில் வலி

மாரடைப்பின் சாதாரண அறிகுறி நெஞ்சுவலி. ஆனால் சில நேரங்களில் இந்த வலி இடது கை, தோள்பட்டை மற்றும் தாடையில் பரவக்கூடும். உடற்பயிற்சி போது இவ்வளவு வலி அல்லது இறுக்கம் இருந்தால் உடற்பயிற்சியை நிறுத்தி உடனடியாக மருத்துவ பராமரிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Related News

Latest News