தமிழில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். இந்நிலையில் கொச்சி மதுபான பாரில் ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து மிதுன், அனீஸ், சோனா மோள் ஆகியோர் கைதான நிலையில், சம்பவத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்து லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.