Monday, December 29, 2025

ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2022ல் ஹூண்டாய் அல்காசர் வாகனம் வாங்கியபின் அதில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதாகக் கூறி மோசடி புகாரை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் மற்றும் ஹூண்டாய் காரின் ஆறு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News