தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், உள் அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் இந்தி மொழியின் பயன்பாட்டை பிரதானப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் தென்மாநில ரயில்வே பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் சேவைகளில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் இடம்பெற செய்ய வேண்டும். டிக்கெட் கவுன்ட்டர்கள், அலுவலக ஆவணங்கள், உள்ளறிக்கை, உத்தரவுகளில் ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.