அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக பாறைகள் உருண்டு சாலையில் விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
அருணாச்சலப்பிரதேசம் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள சப்பர் கேம்ப் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன.
அப்போது, திடீரென மலையில் இருந்து பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.