Monday, December 29, 2025

கட்டுக்கட்டாக பணம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடி கைது

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பி, கோவா உட்பட பல்வேறு இடங்களில் காசினோ, கிளப்கள் நடத்தி வருகிறார். இவர் ‘கிங் 567, பப்பீஸ் 003, ரத்னா கேமிங் என்ற பெயர்களில், விதிமீறலாக ஆன்லைன் சூதாட்டம் நடத்தி, சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வெளிநாட்டு கரன்சி ரூ.1 கோடி உள்பட ரூ.12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.6 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வீரேந்திர பப்பி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத சூதாட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News