அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக பல்வேறு வங்கிகளும் புகார் கூறியுள்ளன. இந்நிலையில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது 2,000 கோடிக்கும் மேற்பட்ட கடன் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில், எஸ்பிஐ வங்கி கடந்த மாதம் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவன பிரமோட்டர்களை ‘மோசடியாளர்கள்’ என அறிவித்து, ரிசர்வ் வங்கிக்கும் புகார் மனு அனுப்பியது. விதிமுறையின்படி, அதன் நகலை சிபிஐக்கும் அளித்ததை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
அதன்பேரில், இன்று அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சார்ந்த பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும், இந்த ஆய்வினை தொடர்ந்து சம்மன் அனுப்பவும் வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது இந்திய திவால் சட்ட தீர்வு முறையின் கீழ் திவால் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.