முதல்வர் ஸ்டாலினுக்கு பேனர் வைத்த ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ

மதுரை உசிலம்பட்டியில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சீமானுத்து ஊராட்சியில் அரிசி குடோன் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டி காணொளி மூலம் திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் முதலமைச்சர், துணை முதலமைச்சரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News