ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தத்தை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனாலும் இரு நாடுகள் இடையே தீர்வு எட்டப்படவில்லை.
உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
புடினும், ஜெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம். இருவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். மக்களை கொல்கின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது.
நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அது கடினமாக உள்ளது என டிரம்ப் கூறி உள்ளார்.
