நாடாளுமன்றத்தில் இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்த மர்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.