பீகாரில், வாக்காளருக்கு அதிகாரம் அளிக்கும் யாத்திரை என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை, சசராம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை (17-ந்தேதி) தொடங்கியது.
கடந்த 19-ந்தேதி நவாடா மாவட்டத்தில் பகத்சிங் சவுக் பகுதியில் ராகுல் காந்தியின் வாகனம் சென்றபோது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென அந்த வாகனத்தின் முன்பு விழுந்துள்ளார். இதில், அந்த வாகனம் அவருடைய கால் மீது ஏறி சென்றது. இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.