Monday, December 29, 2025

ஏமாற்று விளம்பரம் : ராபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

ராபிடோ எனப்படும், ‘பைக் டாக்சி’ சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் அமலில் உள்ளது. இந்த செயலியை நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

‘ராபிடோ’ நிறுவனம் தன் விளம்பரத்தில், ‘உத்தரவாத பயணம்; ஐந்து நிமிடங்களில் ஆட்டோ அல்லது 50 ரூபாயை திரும்பப் பெறுங்கள்’ என, விளம்பரம் செய்திருந்தது. ஆனால், விளம்பரத்தில் குறிப்பிட்டதை போல், ‘ராபிடோ’ நிறுவனம் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் பலர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிட்டனர். கடந்த ஓராண்டில் 1,200க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. இதனை விசாரித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ராபிடோ நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Related News

Latest News