தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாநாட்டு திடலில் 2 தொண்டர்கள் மயங்கி விழுந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காலையில் இருந்து உணவு சாப்பிடாமல் வெயிலில் காத்திருந்ததால் அவர்கள் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.