கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் பகல் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மிக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், அதோடு மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.