அசாம் அரசு பழங்குடி சமூகத்துக்கு சொந்தமான 8.10 கோடி சதுர அடி நிலத்தை அதானியின் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அந்த நிலங்கள் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலை நடத்துவதற்கு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அசாம் அரசின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன நகைச்சுவையா? தனியார் நலன் அல்ல, பொதுநலனே முக்கியம்” என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள்ளது.
அசாம் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாஜக அரசு நாட்டின் வளங்களை மோடியின் நண்பரான அதானிக்கு வெட்கமின்றி கொடுக்கிறது. இது மக்களுக்கான ஆட்சி அல்ல, மோடியின் நண்பர் அதானியின் ஆட்சி என கூறியுள்ளது.