நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் நெட்வொர்க் செயலிழந்ததால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். Downdetector இன் தகவல்படி இன்று மாலை 4 மணி முதல் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 3,500-க்கு மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
சுமார் 71% யூசர்கள் தங்களால் கால் செய்ய முடியவில்லை என கூறியுள்ளனர். 14% பேர் தங்களால் இணையத்தை யூஸ் செய்ய முடியவில்லை என புகாரளித்துள்ளனர். அதேபோல இன்னும் 15% பேர் தங்களது ஏர்டெல் சிம்மில் சிக்னல் எதுவும் வரவில்லை என கூறியுள்ளனர்.