ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மின்சார விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர் இழுக்கும் போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர் விழாவின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.