கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள மதிலகம் பகுதியில் அங்கன்வாடியில் ஷெர்லி என்பவர் உதவியாளாராக வேலை செய்துவருகிறார். இவர் நேற்று கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் தங்க செயினை படிக்கட்டில் வைத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காகம் ஒன்று தங்க செயினை எடுத்துக்கொண்டு பறந்து சென்றுள்ளது. இதையடுத்து அந்த காகம் ஒரு மரத்தில் அமர்ந்தது.
அனைவரும் சத்தம்போட்ட பின்னும் காகம் அங்கிருந்து செல்லவில்லை. ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து மரத்தில் எறிந்ததும் காகம் பறந்தது. மக்கள் சத்தம் போட்டு துரத்தியதும் செயினை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது. செயின் கிடைத்ததும் ஷெர்லி மகிழ்ச்சி அடைந்தார்.