இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி காய் பேத்தி சானியா சந்தோக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார். அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழாவில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.