உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 21 வயது மாற்றுத்திறனாளி பெண் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அப்பெண்ணை துரத்திச் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நீண்டநேரமாகியும் அப்பெண் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பதற்றத்துடன் அவரை தேடியுள்ளனர். அப்போது, காவல் நிலையம் அருகேயுள்ள புதர் ஒன்றில் ஆடைகள் களைந்த நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, மாற்றுத்திறனாளி பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.