புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் தேர்வுக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் அடங்கிய திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்ட்டது. இந்த மசோதா சட்டமான பின்னர், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.