Tuesday, December 30, 2025

சிக்கன் பப்ஸ்-ல் இறந்து கிடந்த பாம்பு – வாடிக்கையாளர் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று அங்குள்ள பேக்கரி கடை ஒன்றில் தனது குழந்தைகளுக்காக முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கியுள்ளார்.

சிக்கன் பப்ஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்து கிடந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பேக்கரி கடை உரிமையாளரிடம் கேட்டபோது, அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News