நாம் அன்றாட பயன்படுத்தும் போக்குவரத்துகளில்,சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவை. அதிலும் நகர வாழ்கையில் சாலைப் போக்குவரத்தில் பயணம் செய்வது பல நேரங்களில் சவாலாக இருக்கும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமானபோது பயணிகள் அனுபவிக்கும் சிரமங்கள் மனதை பாதிக்கும் வகையில் அமைந்துவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.
அதாவது, ரயிலில் அமர்ந்திருந்த ஒரு பெண், அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு விட முடியாமல் தவிக்கிறார். ரயிலின் உள்ளும் வெளியும் மக்கள் நெரிசல் நிரம்பியதால், அவர் ஜன்னலை திறக்க முயற்சித்தாலும், முடியவில்லை.அந்த நேரத்தில் அருகில் இருந்தவர்கள் யாரும் உடனடியாக உதவி செய்யாமல், அவர்களது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். பின்னர் சிலர் முன்வந்து ஜன்னலை திறக்க உதவியதோடு, தண்ணீரை முகத்தில் தெளிக்கவும் கூறினர்.
இது குறித்தான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி, பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர், இருந்தவர்களுக்கு உதவி செய்யாமல் வீடியோ எடுப்பது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த மாதிரியான, வீடியோ சமூக அக்கறையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.