வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான் என்பவர் குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை செய்து வருகிறார்.
பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர். ராக்கி குறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்று தெரிவித்தார்.