2026-27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் வழங்கி உள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்கிறது.
மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பாடப் புத்தகங்கள், மாணவர்கள் வகுப்பறையில் எடுத்த குறிப்புகள், நூலகப் புத்தகங்களைக் கொண்டு தேர்வு எழுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.