ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்து 7 பேர் உயிரிழந்தனர். இதனிடையே பலமு மற்றும் சத்ரா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகுர், கோடா, தியோகர், தும்கா, ஜம்தாரா மற்றும் சாஹிப்கஞ்ச் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.