Friday, August 8, 2025
HTML tutorial

“மஞ்சள் ஜெர்சியில் சஞ்சு” ! CSK-கழட்டி விடப்போகும் அந்த வீரர் யார்?

ஐபிஎல் வட்டாரத்தில் ஒரு மெகா பூகம்பம் வெடித்திருக்கிறது! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆணிவேரான, கேப்டன் சஞ்சு சாம்சன்… அந்த அணியை விட்டே வெளியேறப் போகிறாரா? அவரை தட்டித் தூக்க, நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறதா? வாங்க, என்ன நடக்குதுன்னு விரிவா பார்க்கலாம்.

சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் அணி நிர்வாகத்துக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுக்கு முக்கிய காரணம், சஞ்சுவின் பேட்டிங் பொசிஷன்தான்!

“நான் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். தொடக்க வீரராகக் களமிறங்கினால்தான், இந்திய டி20 அணியில் என்னால் நிரந்தர இடம்பிடிக்க முடியும்” என்பது சஞ்சுவின் விருப்பம். ஆனால், ராஜஸ்தான் அணியோ, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால், சஞ்சுவை 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறது.

இதனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது கனவு சிதைந்துவிடுமோ என்ற கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் சஞ்சு சாம்சன். “ஒன்று, என்னை அணியிலிருந்து விடுவியுங்கள், நான் ஏலத்திற்குச் செல்கிறேன். இல்லை என்றால், வேறு அணிக்கு டிரேட் செய்யுங்கள்” என்று நிர்வாகத்திடம் அவர் கறாராகக் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்க, நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியிருக்கிறது! சஞ்சு சாம்சனை எப்படியாவது அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்வதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்! சஞ்சு சாம்சனை ஏலத்தில் எடுக்க, சிஎஸ்கேவிடம் போதுமான பணம் இல்லை. அப்போ என்ன செய்வார்கள்?

தங்கள் அணியில் உள்ள ஒரு முக்கிய ஸ்டார் வீரரை கழட்டிவிட்டு, அந்தப் பணத்தில் சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது!

அப்படியானால், சஞ்சு சாம்சனுக்காக சிஎஸ்கே விடுவிக்கப் போகும் அந்த நட்சத்திர வீரர் யார்? சஞ்சு சாம்சனை அடுத்த சீசனில் நாம் மஞ்சள் ஜெர்சியில் பார்க்க முடியுமா? ஐபிஎல் 2026 மெகா ஏலம், ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாறப்போகிறது என்பது மட்டும் இப்போதே உறுதியாகிவிட்டது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News