மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,400-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News