இந்திய ரயில்வே (Indian Railways) அவ்வப்போது புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. நாம் ரயிலில் திடீரென்று திட்டமிட்டு பயணம் செய்வதாக இருந்தால் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது டிக்கெட் கிடைக்காது.
நீங்கள் கிளம்ப நினைக்கும் நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே டிக்கெட் புக்கிங் செய்தால் தான் சீட் கிடைக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ரயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இந்த வசதி தற்போது வந்தே பாரத் ரயில்களில் (Vande Bharat trains) மட்டுமே கிடைக்கும்.
இந்திய ரயில்வேயின் மிகவும் பிரபலமான வந்தே பாரத் ரயில்களில் 8 ரயில்களில் மட்டும் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை நீங்கள் பெறலாம். இந்த வசதி ஜூலை 17ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.
8 வந்தே பாரத் ரயில்களின் பட்டியல்:
20627 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20628 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20631 மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20642 கோயம்புத்தூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20646 மங்களூரு சென்ட்ரல்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20671 மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20677 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
எப்படி புக் செய்வது?
ஐஆர்சிடிசி(IRCTC) வலைத்தளம் அல்லது செயலிக்கு சென்று காலியாக உள்ள இருக்கைகளின் விபரங்கள் தெரியும். அடுத்து அந்த காளியாக உள்ள இருக்கைகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.