விஜயகாந்த் புகைப்படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது! – பிரேமலதா

எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளரை சந்தித்த அவர், “விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது. சட்டம் – ஒழுங்கை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இதைச் சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related News

Latest News