இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி பெற உதவிய முகமது சிராஜ், தெலங்கானாவின் பெருமை என அம்மாநில காவல்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு, டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய சிராஜூக்கு, அவரை கௌரவிக்கும் பொறுட்டு தெலங்கானா அரசு டிஎஸ்பி பதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால், சிராஜை இந்திய ரசிகர்கள் செல்லமாக டிஎஸ்பி என்றும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு சிராஜை வாழ்த்தியிருக்கும் தெலங்கானா காவல்துறை, இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றிபெற உதவிய சிராஜின் செயல்பாட்டுக்கு வாழ்த்துகள் எனவும், அவர் தெலங்கானாவின் பெருமை என்றதோடு, விளையாட்டு உடையில் ஒரு ஹீரோ எனவும் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளது.