நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதற்காக அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.