தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 40 வயது நபருக்கும் நடைபெற்ற திருமணத்தின்மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும் ஸ்ரீனிவாஸ் கவுட் என்ற 40 வயது நபருக்கும் கடந்த மே 28 அன்று திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் தாயார், சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட், இடைத்தரகர், சட்டவிரோத திருமணத்தை நடத்திவைத்த நபர் மற்றும் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் ஒரு பெண் ஆகியோர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தற்போது குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுமிக்கு தொடர்ந்து ஆலோசனை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.