சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு சென்ற AI180 விமானத்தில் சில சிறிய கரப்பான் பூச்சிகளால் தொந்தரவு ஏற்பட்டதாக இரண்டு பயணிகள் புகார் அளித்தனர். பின்னர் இரண்டு பயணிகளையும் அதே கேபினில் உள்ள மற்ற இருக்கைகளுக்கு மாற்றப்பட்டனர்.
பயணிகளின் இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.