மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் முக்கியமான ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றது. வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
ஆயுஷ்மான் அட்டை பெறுவதற்கு மத்திய அரசு பல வழிகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ஆதார் அட்டை இல்லாமலும் ஆயுஷ்மான் பாரத் அட்டையைப் பெற முடியும். ஆயுஷ்மான் அட்டையைப் பெற, நீங்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது மருத்துவமனைகளில் உள்ள உதவி மையத்திற்குச் செல்லலாம்.
உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்த பிறகு உங்களுக்கு அட்டை வழங்கப்படும்.