ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.