மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 2) பயணி ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டில் முதல் வகுப்பு பெட்டியில் பயணித்துள்ளார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
சோதனையின் போது கோபமடைந்த பயணி, அலுவலகத்தில் உள்ள கணினி, CPU உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் டிக்கெட் ஆய்வாளர் உட்பட ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர்.
ஒரு கட்டத்தில், தாராவியில் தான் செல்வாக்கு மிக்கவர் என்று கூறி ஊழியர்களை மிரட்டினார். “தாராவியில் என் பெயரை மட்டும் சொல்லுங்கள், எல்லோருக்கும் என்னை தெரியும் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.