இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அணை இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. திடீர் மேக வெடிப்பு காரணமாக மலானா நதி கொந்தளிப்பாக மாறியது.
இந்த வெள்ளத்தில் மலானா தடுப்பணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் காகிதப் படகுகள் போல அடித்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.