Saturday, August 2, 2025
HTML tutorial

சாகும் வரை சிறை தண்டனை – பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இவர் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை கிளப்பியது. இதையடுத்து பிரஜ்வல் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.

விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் அறிவித்தார். இதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News