மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு நாக்பூரில் உள்ள தேநீர் கடை ஒன்றில் வைத்து அப்பெண்ணை போலீசார் கைது விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் பெயர் சமீரா என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”கடந்த 15 ஆண்டில் 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். அதில் ஒருவரிடம் ரூ.50 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.15 லட்சமும் பறித்துள்ளார். 9வது நபரை திருமணம் செய்ய சரியான ஆள் தேடிக்கொண்டிருந்தபோது அவரை கைது செய்தோம். சமீரா நன்கு படித்தவர். அவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஆனால் திருமணம் செய்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் தொழிலையும் சேர்த்து செய்து வந்தார்”என்று தெரிவித்தார்.