ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டில் நடக்கப்போகும் மிக நீண்ட சூரிய கிரகணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இதில் சூரிய ஒளியைத் தடுத்து நமது கிரகமான பூமியின் மீது நிழல் விழுகிறது.
அந்த வகையில் இன்று நடக்கவிருக்கும் இந்த முழு சூரிய கிரகணமும் ஏறக்குறைய 6 நிமிடங்கள் வரை பூமியின் சில பகுதிகளை இருளில் மூழ்க்கடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. ஆனாலும் இது பூமி முழுவதையும் இருளாக ஆக்காது என்றும் தகவல்கள் சொல்கின்றன.
இன்று நடக்கவிருக்கும் இந்த அரிய வானியல் நிகழ்வால் ஸ்பெயின், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் காணப்படும். ஆனாலும் இது முழு இருளாக இல்லாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான ஒளியுடன் இருக்கும். மேற்குறிப்பிட்ட நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இதை காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூரிய கிரகணம் உணரப்படலாம். மேலும் இந்தியாவின் மேற்குப் பகுதிகள் ஓரளவு இருளடையலாம். குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சூரியனின் 10% முதல் 30% வரை மறையலாம் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சில நாட்களாக உலகம் முழுவதும் இன்று 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என வெளியாகும் செய்திகளை நாசா மறுத்துள்ளது. மேலும் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளார்.