Saturday, August 2, 2025
HTML tutorial

டிரம்ப் கையிலெடுத்த “வரிப் போர்!” இந்தியாவின் இந்த துறைகள் ஆட்டம் காணும்?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலகின் 100 நாடுகளுக்கு வரிகளை விதிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகமான ட்ரூத் சோஷியலில் இந்தியா மீது 25% வரி விதிப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனாலும் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டபோது, இந்தியாவின் எந்தத் துறைகள் பாதிக்கப்படும் என்று அப்பொழுதே தெரிந்தது.

இந்தியாவின் 30 துறைகளிலிருந்து பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 6 துறைகள் விவசாயத்தையும் 24 துறைகள் தொழில்துறையையும் சேர்ந்தவை. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி தொழில்துறையான மருந்துத் துறைக்கு அப்போது சுமார் 13 பில்லியன் டாலர் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

இப்போதும் அதுபோல நடக்குமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இது போக, நகைகள், ஜவுளி, தொலைத்தொடர்பு, மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் ரசாயனங்கள் தொடர்பான துறைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நிகோர் அசோசியேட்ஸின் பொருளாதார வல்லுநரான மிதாலி நிகோர், இதை வெறும் 25 சதவீத வரியாகக் பார்க்கக்கூடாது. ஏனெனில் இதற்கு 10 சதவீத அபராதமும் இருப்பதால், வரி 35 சதவீதமாக மாறிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இந்த வரிகளால் இந்தியாவுக்கு ஒரு வருடத்துக்கு 7 பில்லியன் டாலர் இழப்பீடு இருக்கும் என்று சிட்டி ரிசர்ச் மதிப்பிடுவது சற்று பதற்றத்தையே ஏற்படுத்துகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News