பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.