கடந்த ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.